Popular Posts

Sunday, December 19, 2010

எல்லோரும் வேதம் கற்கலாமா?

இஸ்லாமியர்களின் வேதம் எது என்றால் குர் ஆன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்த வேதத்தை ஓதவும் அறிந்துள்ளனர். இஸ்லாமியர் எவரும் அதைக் கற்கவோ ஓதவோ தடை இருப்பதில்லை. அதன் மொழிபெயர்ப்புகள் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. அதோ போல கிருத்துவர்கள் தங்கள் வேதமாகிய பைபிளைத் தங்கள் தாய்மொழியிலேயே படிக்கிறார்கள். பைபிள் படிக்கத் தகுதியில்லாத கிருத்துவர் என்று எவரும் இல்லை. ஆனால் ஹிந்து மதத்தில் சிலர் தான் கற்கலாம், சிலர் தான் கற்பிக்கலாம் என்று உள்ளது. இதை ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பு என்று கொண்டாடுவதா அல்லது மற்ற மதங்களைப் பார்த்து காப்பியடித்து அதே போன்ற நிலைமையை இங்கு ஏற்படுத்த வேண்டுமா? வேகமாக மாறிவரும் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுப்பாடுகள் செல்லுமா?

5 comments:

  1. இஸ்லாமியர்களின் வேதம் எது என்றால் குர் ஆன் என்று எல்லோரும் சொல்வார்கள்.

    9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


    8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.


    இது தான் துலுக்க வேதம்.

    ReplyDelete
  2. ஐயா, கிறிஸ்துவனின் பழைய கோட்பாடு பார்த்தால் , மேலெ கூறியதைவிட மோசமாக இருக்கும். அதனால் அந்த குப்பைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

    ReplyDelete
  3. நன்றி, திரு தமிழன். குப்பைகள் எல்லாச் சமய நூல்களிலும் உண்டு. அவரவர் வாசித்துப் பார்க்கச் சுதந்திரம் வேண்டும் என்பது தான் என் வாதம். நம்முடைய குப்பைகளை மற்றவர்கள் தெரிந்து கொண்டுவிடப் போகிறார்களேஎன்று பயந்து அதை மூடி வைப்பது பலன் தராது. ஐரோப்பியர் பலர் அதை வெளிப்படுத்திவிட்டனர். குப்பைகளை ஒதுக்கிவிட்டு மறைந்து கிடக்கும் ரத்தினங்களை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு எல்லோரும் வேதம் கற்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
    பாரதி அடிப்பொடி

    ReplyDelete
  4. திரு அடிப்பொடி அவர்களே உங்களின் சொற்படி,
    ”நம்முடைய குப்பைகளை மற்றவர்கள் தெரிந்து கொண்டுவிடப் போகிறார்களேஎன்று பயந்து அதை மூடி வைப்பது பலன் தராது. ஐரோப்பியர் பலர் அதை வெளிப்படுத்திவிட்டனர்.” ,
    ஆங்கிலேய கிறிஸ்துவர்கள் அவர்களின் நோக்கத்தில் வெற்றிபெற்று விட்டார்கள். நீங்கள் , நமது வேதத்திலும் குப்பை இருக்கிறது என்று கருதுகிறீர்கள், அது தவறு. please visit
    www.agniveer.com

    ReplyDelete
  5. நன்றி திரு தமிழன் அவர்களே. அறிஞர்களிடமிருந்து கற்க விழைவதே என் நோக்கம். அதன்படி இன்று நீங்கள் கொடுத்த சுட்டி எனக்கு ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக அமைந்தது. உங்களிடமிருந்து மேலும் கற்க விரும்புகிறேன்.
    குப்பைகளைத் தூற்றுவது என் நோக்கமல்ல. முதலில் நல்லதை மட்டும் பார்த்துக் கொண்டு வருகிறேன். குப்பை என்று எதைக் கருதுகிறேன் என்பதை உரிய வாய்ப்புக் கிடைக்கும்போது தெரிவித்துத் தங்களிடமிருந்து விளக்கம் பெறுவேன்.
    பாரதி அடிப்பொடி

    ReplyDelete